நிறம்

# அவன் கவிழ்த்து வைத்தக் கோப்பையை நிமிர்த்தி மீண்டும் வெண்ணிற வோட்காவை நிரப்பி ஒரே மூச்சில் கல்ஃப்பாக அடித்தாள் கொத்தாக அவன் முன் சட்டையைப் பிடித்திழுத்து கொஞ்சம் அவனுக்கும் உதட்டோடு உதடாக அமுதூட்டினாள், பின் கெக்கலித்து பெருஞ்சிரிப்பு சிரித்தாள் எழுந்து நின்று – எங்கே நின்று, தவழ்ந்தவளை பொன்னிற இடையில் கைகோர்த்து அணைத்து நடந்தான் கையில்லாத ஜாக்கெட் மற்றும் சிவப்புச் சேலையில் ச்சும்மா சுள்ளென்று இருந்தாள் # வீதியும் வீடும் அருகில் நெருங்க ஒரு நிமிஷம் என்றாள்… மேலும் படிக்க »

EmailPrintShare

முக்கண்ணன்

மனசுக்குள் மந்திரம் பொங்கல் நெய்வேத்தியம் சுகப்படும்போது பூஜை – காலங்காலமாய் கல்யாணசுந்தர குருக்கள் பக்தர்களுக்கும், ஆறுகால பூஜைக்கும்… வழக்கத்தில் வழக்கற்று விழுந்தது சொக்கப்பனைத் தீ; மூச்சுத்திணறலை இறுகப்பற்றிற்று இளையதலைமுறை… வாய்நிறைய வடமொழி ஸ்லோகம் வாச வெண்மிளகுப் பொங்கல் பக்கத்தூர் புதிய படிக்கூலி… சிரிக்கும் சிரிப்பில் சுவாமிநாதரே சுவாமியென ஊர் பேசிற்று… கூலிப்படியோ கூட்டுப்பொரியல்… பிரதோஷ பூஜை தக்ஷிணாமூர்த்தி பூஜை ராகுகால துர்க்கா பூஜை சிவன்கோயில் சிலைகளும் பக்தர்களோடு உற்சவமூர்த்திகள்! எல்லா அமோகத்திலும் காலச்சக்கரம் மூத்த தலைமுறைக்கு… இரவோடு… மேலும் படிக்க »

கூசும் சூரியன்

எங்கள் வீட்டு வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் வானவில் வரைந்தவை பிஞ்சு மழலை பிதற்ற தேனெடுக்கப் போன முதல்நாளில் தேம்பியழுதபடி திரும்பி வந்தது குழலும் யாழும் வெம்பி வெடிக்க வாசலிலேயே முறைப்பாடு வண்ணத்துப்பூச்சியின் விரியத்துடித்த சிறகுகளில் வன்பிரம்பின் விளையாட்டு அது உருவாக்கியிருந்தது ஒருதுளி கருஞ்சிவப்பு சூரியன்!

தமிழ்த்தாய் வாழ்த்து!

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரனின் வீரமும் வெற்றியும் நீயே தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ செந்தமிழே உயிரே நறுந்தேனே செய்வினை மூச்சினை உனக்களித்தேனே நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது… மேலும் படிக்க »